திங்கள், 13 ஜூன், 2011

செவ்வாய், 17 மே, 2011

பிரியாத வரம் வேண்டும்




திருமணம் என்றாலே இருமனம் இணைவதுதானே.அப்படி இணைந்த இரு உள்ளங்கள் நிறைவான,நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்களா ? இல்லை என்பதுதான் பெருபாலானவர்களின் ஒருமித்த பதிலாக இருக்கும்.

மணம் பரப்புகின்ற மலர்களைப் போன்ற குடும்ப வாழ்க்கை எத்தனை பேருக்கு அமையப் பெற்றிருக்கிறது. பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணமானாலும் சரி, அல்லது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அண்மை காலமாக அதிகமான எண்ணிக்கை கொண்ட தம்பதிகள் விவாரத்துக்காக குடும்ப வழக்கு நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் என்பது புள்ளி விபரங்கள் தரும் அதிர்ச்சித் தகவல்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் விவாகரத்தை எங்கே நிச்சயிக்கிறார்கள் ? இரண்டு மனங்கள் ஒன்றுபட்ட பின்பு பிரிவு என்ற நிலை எப்படி ஏற்படும் ? சூழ்நிலைதான் எல்லாவற்ருக்கும் காரணமா ? அப்படியென்றால் சேர்ந்து வாழ் அந்த்ச் சூழ்நிலை வழி ஏற்படுத்தித் தராதா ?

வாழ்க்கை என்பது பரஸ்பர நம்பிக்கையின் மீது எழுப்பப்படும் உயர்ந்த கோபுரம். எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும் இணைந்த கைகள் இறுக வேண்டும். அது சற்றே தளர்ந்தாலும் தாம்பத்தியம் சறுக்கி விடும். எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்கும் மனிதனுக்கு அதை எப்படி முடிப்பது என்பது தெரிவதில்லை. வாழ்க்கை என்பதே முடிவு தெரியாமல் அதை நடத்திக்கொண்டிருப்பதுதான். பல அனுபவங்களைப் பெற்று முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கே சில நேரம் வாழ்க்கை பயத்தையும்,திகைப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

வாழ்க்கை என்றாலே இன்பம்-துன்பம் இரண்டும் நிறைந்ததுதான். ஆணின் துணையின்றி பெண்ணோ, பெண்ணின் துணையின்றி ஆணோ வாழ முற்படுவது இயற்கைக்கு மாற்றமானது. காலம் காலமாக கணவன்-மனைவி இருவருக்கும் போதிக்கப்பட்டு வருவது விட்டுக் கொடுத்தல் என்பது பற்றியதாகும். இதுவே, இவர்கள் பயில வேண்டிய முற்று முதல் பாடம். குடும்பம் கடமைகளும், கட்ட்டுபாடுகளும் உட்பட்ட அழகான அமைப்பு அது ஒரே நாளில் ஏற்பட்டதன்று. ஆனால், அது ஒரு தனி கூடு. அந்த கூட்டுக்கு வெளியே அழகிய வண்ணச்சிறகுகளுடன் கூடிய உலகம் ஒன்று உள்ளது.

எதிர்பார்ப்புகளோ, ஏமாற்றங்களோ இல்லாத நேர்மையான் ஒரு துளி அன்பு அந்த உலகிலிருந்து கிடைத்தாலும் அதை விட்டுவிட மனம் உடன்படுவதில்லை. குடும்ப அமைப்பு சேதப்படாத பட்சத்தில் அதை விட்டுவிட வேன்டிய அவசியமேயில்லை. தேவை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனம் மட்டுமே. எஅவரிடத்தில் விட்டுக்கொடுத்தல் இல்லையோ அங்கே தான் பிரச்சினைகள் உருவெடுக்கிறது. மேலும்,விட்ட்டுக் கொடுத்தலிலும், புரிந்தணர்தலிலும்தான் உண்மையான அன்பு ஊற்றெடுக்கும்.

கணவன்-மனைவி இருவரும் தலைகனத்தை முற்றிலும் களைய வேண்டும். படித்து விட்டோம் என்ற அகந்தை அறவே இருக்கக் கூடாது. இது கூட மன் முறிவுக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. கணவன்-மனைவி இருவரில் யார் தவறிழைத்து விட்டாலும் மற்றவர் மன்னிக்க வேண்டுமேயொழிய அதை ஒரு பூதக்கண்ணாடி வைத்து பார்த்து பெரிது படுத்தாமல் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி உடனுக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

வருடத்திற்கு முன்னூறு விவாகரத்து வழக்கு என்றிருந்த நிலை, அண்மை காலமாக ஆயிரங்களாக அதிகரித்துள்ளது. விவாகரத்து அதிகளவில் வருவதற்கு நிலவி வரும் சமுதாய அமைப்பும் ஒரு காரணம் எனப்படுகிறது. முந்தைய காலங்களில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் நேர்மாறாக உள்ளனர். சகிப்புத் தன்மையற்றவர்களாக அதே நேரத்தில் பிரச்சினைகளைக் கையாளும் விதத்திலும் தெளிவற்ற முறையை தான் கடைப்பிடிக்கிறார்கள்.

முன்பெல்லாம் மணவாழ்க்கை வேண்டாம் என்று வேண்டுவோரில் பத்து சதவீதம்பேர் தான் பெண்கள். ஆனால், நிலைமையே தலை கீழ். இன்று, எழுபது சதவீதம் வரை மகளிர் என்பது அதிர்ச்சித் தர கூடிய உண்மை.

புகுந்தவீட்டில் தன் கணவனுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தபோதிலும் அவளுக்கு கனவன் என்பவன் தான் முதல் உறவு.இந்த உறவே இறுதி வரை அவளுடன் வரக்கூடியது . இந்த உறவு வெரும் உடலின்பத்துக்கு மட்டுமல்ல. காமம் என்பது சரீரம் தொடர்பான ஒருவகை யக்கம். அது உடம்பிலேயே தொடங்கி உடம்பிலேயே நின்று விடும். ஆனால், தெளிந்த நீரோடை போன்ற தூய்மையான அன்பு மட்டும் தான் இறுதி வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

வாழ்க்கை என்பது சட்டையைக் கழற்றிவிட்டு வேறு சட்டையை மாற்றிக்கொள்வது போன்றதன்று. அதிலும் கணவனிடம் அடம்பிடித்து ஜீவனாம்சம் பெற்ற காலம் மலையேறிவிட்டது. எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் என்று விவாகரத்து கோருவோரில் பெண்கள் அதிகம்.

நானும் சம்பாதிக்கிறேன். என்னாலும் தனித்து வாழ முடியும் என்ற ப்பான கருத்தை தெரிந்தோ தெரியாமலோ ங்களுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள்.

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கணவன்-மனைவி இருவருக்குமே கவுன்சிலிங் நடத்தி கருத்து வேறுபாடுகளை களைய நிதிமன்றம் முயற்ச்சிப்பது வழக்கம்.ஓரளவே பலன் ந்த இந்த கவுன்சிலிங் இப்போது வெறும் சம்பிரதாயமாகி விட்டது. மாறி வரும் தலைமுறையின் னோபாவங்களை அறிந்து கொள்ள முடியாத உளவியல் நிபுணர்கள் ஒரு பக்கம் ஒத்துழைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் கவுன்சிலிங்கை அணுகும் தம்பதிகள் மறுபக்கம்.இதனாலோ என்னவோ சமரசம் தோற்று விவாகரத்து ஒன்றே ஒரே வழி என்ற நிலை வந்து விடுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை.

ஆண் சம்பாத்திக்க வேண்டும், பெண் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டுமென்ற நியதி ரொம்பவே மாறி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விதவிதமான பன்னாட்ட்டு நிறுவனங்கள் கால் சென்டர்கள், கணிணி மென்பொருள் நிறுவனங்கள் இப்படி நித்தம், நித்த்ம் பல பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, அவர்களுக்கு கை நிறைய ஊதியமும் கிடைக்கச் செய்கிறது. பொருளாதார ரீதியாகவும் ஆனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால் பெற்றோரையும்,உற்றாரையும் கலந்தாலோசிக்காமல் அவசர கத்யில் முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இரண்டு பேரும் வேலைக்கு போவதால் இறுக்கமாகும் சூழல் மனைவியைவிட கணவன் சம்பாதித்தால் உண்டாகும் ஈகோ, அத்தோடு சின்ன,சின்ன ஊடல்கள் கூட பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது இவையெல்லாம் சேர்ந்து விவாகரத்துக்கு வித்திடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

மொத்ததில் உண்மையான அன்போடு விட்டுக் கொடுப்பவர்களின் மணவாழ்க்கை என்றுமே கெட்டுப்போகாது என்பதை ஒவ்வொரு தம்பதியரும் மனதில் பதித்தால் தினந்தோறும் ஆனந்தமே!

ஞாயிறு, 15 மே, 2011

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.


இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்